ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பஸ் நிலையத்தின் உள்ளே கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் அதனை கடந்து செல்லும் பொதுமக்கள் சிரமமடைந்து வருகின்றனர். மேலும் இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.