போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2026-02-22 17:18 GMT

திருச்சி விமான நிலையம் அருகே பெரியார் தெரு செல்லும் வழியில் சாலையோரம் பொது குடிநீர் குழாய் உள்ளது. தரைமட்டத்தில் இருந்து கீழே இறங்கி தண்ணீர் பிடிக்கும் வகையில் இந்த குழாய் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இப்பகுதியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பொது குடிநீர் குழாய் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இந்த குடிநீர் குழாயை அகற்றி பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்