சேலம் குஞ்சாக்காடு அருகே பச்சப்பட்டி செல்லும் சாலையில் பாவடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்துவிழுந்து உள்ளது. இதனால் பள்ளி உள்ளே சமூக விரோத செயல்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளி சுற்றுச்சுவரை சீரமைப்பார்களா?