கோவை மாநகராட்சி 99-வது வார்டுக்கு உட்பட்ட கோணவாய்க்கால்பாளையம் பஸ் நிறுத்த பகுதியில் பயணிகள் நிழற்குடை இருந்தது. இந்த நிழற்குடை, அங்கு நடைபெற்ற சாக்கடை கால்வாய் பணிக்காக அகற்றப்பட்டது. அதன்பிறகு 3 ஆண்டுகள் ஆகியும் மீண்டும் அந்த பஸ் நிறுத்த பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் அங்கு பஸ் ஏற வந்து செல்லும் பயணிகள் மழை, வெயிலில் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக பெண்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். எனவே அங்கு பயணிகள் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.