வளவனூர் அருகே வாணியம்பாளையம் குளக்கரையில் உள்ள ஆலமரத்தில் விஷ வண்டு கூடு கட்டியுள்ளது. இதன் அருகே ரேஷன் கடை உள்ளது. மேலும் இப்பகுதியை சுற்றி அதிகளவில் வீடுகள் உள்ளதால் விஷ வண்டுகளால் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஒருவித பயத்துடனேயே உள்ளனர். அசம்பாவிதம் ஏதும் நிகழும் முன் தீயணைப்புத்துறை அதிகாரிகள் விஷவண்டு கூட்டை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?