ஈரோடு முனிசிபல் காலனி கல்யாண விநாயகர் கோவில் பகுதியில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. நாளுக்கு நாள் இவற்றின் தொல்லை அதிகரிக்கிறது. அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களை துரத்தி வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் முன்வருவார்களா?