காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புறவழிச்சாலையில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு, சென்னை-வேலூர் மார்க்கத்தில் தேசிய நெடுஞ்சாலையோரம் துணியால் ஆன பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. அந்த துணி நிழற்குடை சூறைக்காற்றால் கிழிந்து பறந்துபோய் விட்டது. அங்கு நிழற்குடை இல்லாததால் பயணிகள் வெயில், மழையில் காத்திருக்கின்றனர். துறை சார்ந்த அதிகாரிகள் காவேரிப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வினோத்குமார், காவேரிப்பாக்கம்.