இப்ப விழுமோ? எப்ப விழுமோ?

Update: 2026-07-12 18:06 GMT
சிதம்பரம் அருகே சிதம்பரநாதன் பேட்டையில் கான்சாகிப் வாய்க்கால் மீது உள்ள பாலம் கட்டப்பட்டு சுமார் 26 வருடங்களுக்கு மேல் ஆகிறது. தற்போது இந்த பாலத்தின் இருபுறமும் உள்ள சுவர்கள் முற்றிலும் சேதமடைந்து இப்ப விழுமோ? எப்ப விழுமோ? என்ற நிலையில் உள்ளது. இதன் ஆபத்தை உணராமல் அப்பகுதி மக்கள் இதன் மீது சென்று வருகின்றனர். அசம்பாவிதங்கள் ஏதும் நிகழும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழைய பாலத்தை இடித்து அகற்றி விட்டு புதிய பாலத்தை கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்