விபத்து அபாயம்

Update: 2026-02-22 17:50 GMT

கோவை காந்திபார்க் தடாகம் சாலையில் இருந்து முத்தண்ணன் குளக்கரை வழியாக தெலுங்குபாளையம் சாலை செல்லும் பிரிவு பகுதியில் புதிதாக சாலை அமைத்து உள்ளனர். அந்த பகுதியில் ஏற்கனவே வேகத்தடை இருந்தது. ஆனால் அதை அகற்றிவிட்டனர். இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. விபத்து ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்