ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ரெயில் நிலையம் செல்லும் சாலையில் உள்ள பழைய அரசு ஆஸ்பத்திரி தடுப்புச்சுவர் மிகவும் வலுவிழந்து காணப்படுகிறது. அவ்வப்போது மழை பெய்யும்போது அந்த சுவரில் இருந்து சாலையில் மண் சரிகிறது. இதனால் சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக வந்து செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படும் முன்பாக அந்த தடுப்புச்சுவரை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.