கொள்முதல் நிலைய கட்டிடம் வேண்டும்

Update: 2025-05-18 11:31 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், வடக்கலூரில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் சுற்றுப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் தங்களின் விளைநிலத்தில் விளைவித்த நெல்மணிகளை இந்த கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் இந்த கொள்முதல் நிலையத்தில் போதிய அளவு கட்டிட வசதி இல்லாமல் உள்ளதால் மழைக்காலங்களில் நெல்மணிகள் மழையில் நனையும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த கொள்முதல் நிலையத்தில் போதுமான அளவு கட்டிட வசதி ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்