தபால் நிலையம் வேண்டும்

Update: 2025-05-18 10:24 GMT

சென்னை அடையாறு பகுதியில் உள்ள சாஸ்திரி நகரில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் செயல்பட்டு வந்த தபால் நிலையம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களது பணத்தை தபால் நிலையத்தில் செலுத்துவதற்கு வெகு தூரம் செல்லவேண்டிய நிலை உள்ளது. மேலும், வீடுகளுக்கு வரும் அஞ்சல்களும் தாமதமாக வருவதால் மிகவும் அவதியடைகின்றனர். எனவே பொதுமக்களின் கஷ்டத்தை உணர்ந்து தபால்த்துறை அதிகாரிகள் இந்த பகுதிக்கு மீண்டும் தபால் நிலையத்தை கொண்டு வர வேண்டும்.


மேலும் செய்திகள்