நாகர்கோவில் செட்டிகுளத்தில் இருந்து வேப்பமூடு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் பாதசாரிகள் நடந்து செல்வதற்காக கழிவுநீர் ஓடையின் மீது சிமெண்டு சிலாப்புகள் அமைத்து நடைபாதை வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த நடைபாதையில் மாடன்சாமி கோவில் அருகில் சிலாப்புகள் உடைந்து காணப்பட்டது. இதனால் இரவு நேரம் நடந்து செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் இருந்தது. இதுபற்றி ‘புகார்பெட்டி’யில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சிமெண்டு சிலாப்புகளை சீரமைக்கத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.