திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே துறையூர் முதல் தம்மம்பட்டி செல்லும் நெடுஞ்சாலையில் புடலாத்தி கைகாட்டி என்ற பஸ் நிறுத்தத்தில் இருந்த பழைய பயணிகள் நிழற்குடை சிதிலமடைந்தடை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டது. இந்த பஸ் நிறுத்தத்தை உட்புற கிராமங்களான புடலாத்தி, மாராடி மற்றும் கிழக்கிகாடு சேர்த்த பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் பயன்படுத்துகின்றனர். மழை மற்றும் கோடை காலத்தில் இங்கே காத்திருக்கும் பயணிகள் நிழற்குடை இன்றி பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.