சாலையோரம் கொட்டப்படும் குப்பை

Update: 2025-05-18 09:39 GMT

கரூர் மாவட்டம் மண்மங்கலம் பகுதியில் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதேபோல் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் இப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் தார் சாலையின் ஓரத்தில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதுடன், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்