பெரம்பலூர் ஒன்றியம் செங்குணம் ஊராட்சிக்கு உட்பட்ட செங்குணம் மற்றும் அருமடல் கிராமத்தில் தலா ஒரு ரேஷன் கடை உள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் மழை மற்றும் கோடை வெயில் உள்ளிட்ட அனைத்து காலங்களிலும் ரேஷன் கடை முன்பு நீண்ட நேரம் வரிசையில் நின்று பொருட்களை வாங்கும் நிலை உள்ளதால் அவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ரேஷன் கடை முன்பு நிழல் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.