திருப்பூர் மாநகராட்சி 30-வது வார்டில் உள்ள லட்சுமி நகர் முதல் தெருவில் குடிநீர் குழாய்க்காக குழி தோண்டப்பட்டது மூடப்படாமல் உள்ளது. இவ்வழியாகத்தான் வாகனங்கள் அடிக்கடி சென்று வருகின்றது. இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சில நேரங்களில் நிலை தடுமாறி குழிக்குள் விழும் நிலை உள்ளது. இதனால் கை, கால்களில் சிராய்ப்பு மற்றும் எலும்பு முறிவும் ஏற்படுகிறுது. எனவே அதிகாரிகள் குழியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.