மதுரை நகர் தபால் தந்தி நகர் விரிவாக்கம், கோமதி அம்மன் நகர் 2-ம் தெரு பகுதிகளில் சாலை
ஓரங்களில் சீமை கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்து புதர் மண்டி கட்சியளிக்கிறது. அதில் இருந்து பாம்புகள் மற்றும் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் மிகவும் அச்சமடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.