பாராட்டு

Update: 2022-08-02 08:18 GMT


அந்தியூர் அருகே உள்ள புதுமேட்டூர் கிராமத்தில் சாக்கடை கால்வாய் அமைக்க 50 மீட்டர் தூரத்துக்கு குழி தோண்டப்பட்டு இருந்தது. அதன்பின்னர் 10 மாதங்களாக சாக்கடை பணி நடைபெறவில்லை. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின்பேரில் அதிகாரிகள் பணியை விரைந்து முடித்துள்ளார். எனவே பொதுநலன் கருதி செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.


மேலும் செய்திகள்