நெய்வேலி அருகே மேல்பாப்பனப்பட்டு கிராமத்தில் உள்ள பொது கழிப்பறை கட்டிடம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பின்றி பூட்டிக்கிடக்கிறது. இதனால் அந்த கழிப்பறையை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் இயற்கை உபாதையை கழிக்க திறந்தவெளியை பயன்படுத்தி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.