கம்பம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள குளங்களில் விவசாயிகள் மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி குளங்களை தூர்வாரும் விவசாயிகள் மண்ணையும் அள்ளிச்செல்கின்றனர். ஆனால் அவற்றை முழுமையாக தூர்வாராமல் ஆங்காங்கே குழிகள் தோண்டி மண் அள்ளுகின்றனர். இதனால் குளங்களில் தண்ணீர் தேக்கி வைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே குளங்களை முறையாக தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.