தெருநாய்கள் தொல்லை

Update: 2025-05-11 16:11 GMT

சேலம் மாநகராட்சி 4 ரோடு சந்திப்பு பகுதியில் இருந்து ராமகிருஷ்ணா ரோடு செல்லும் சாலையில் மீன், இறைச்சிக்கடைகள் உள்ள பகுதிகளில் நாய்கள் அதிகளவில் உள்ளன. நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆட்கள் நடமாட்டம் குறைந்த நிலையில் வெளியூர்களுக்கு சென்று வரும் பயணிகள் நாய்களால் விரட்டப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்த பகுதியில் உள்ள மசூதிக்கு அதிகாலையில் தொழுகை நடத்த செல்ல வேண்டும் என்றால் கற்களை எடுத்துக்கொண்டு ஒரு வித பீதியுடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே நாய்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

-அசன் முகமது, சேலம்.

மேலும் செய்திகள்