அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம், கீழ்நத்தம் பகுதியில் ஆரியான் ஏரி உள்ளது. இந்த ஏரியில் கடந்த ஆண்டு போதுமான அளவு நீர் தேக்கி வைக்க முடியாமல் போனதால் விவசாயம் பொய்த்து போனது. மேலும் வெயில் காலங்களில் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. எனவே இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில் இந்த ஏரியை தூர்வாரி ஆழப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.