தூர்வாரப்படாத மழைநீர் வடிகால்

Update: 2025-05-11 13:20 GMT

அரியலூர் நகரின் முக்கிய நீர்நிலையாக செட்டி ஏரி உள்ளது. இந்நிலையில், செட்டி ஏரிக்கரைக்கு மழைநீர் செல்லும் வகையில் மழைநீர் வடிகால் அமைந்துள்ளது. ஆனால் இந்த மழைநீர் வடிகால் முழுவதுமாக செடி கொடிகளின் ஆக்கிரமிப்பிலும், குப்பைகள் நிறைந்தவாறும் காட்சியளிக்கிறது. இதனால் செட்டிஏரிக்கு வரும் நீர்வரத்து தடைபட்டு நிற்கும் சூழல் நிலவி வருகிறது. அதேபோல் மாவட்டத்தில் அனைத்து நீர்நிலைகளும் தூர்வாரப்பட்டாலும், நகரின் முக்கிய நீர் நிலைகள் தூர்வாரப்படாமல் உள்ளதால் செட்டிஏரி போன்றே அனைத்து நீர்நிலைகளும் காட்சியளிக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு நகரில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் தூர்வார வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்