தெருநாய்கள் தொல்லை

Update: 2025-05-11 13:12 GMT

அரியலூர் மாவட்டம் கடுகூர் கிராமத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஏராளமான கடைகளும், வீடுகளும் உள்ள இந்த கிராமத்தில் தெருநாய்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நடந்து செல்லும் பொதுமக்களை குரைத்துக்கொண்டே கடிக்க பாயும் இந்த தெருநாய்களால் அனைத்து பொதுமக்களும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். குழந்தைகளும் வெளியில் சென்று விளையாடுவதற்கு அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்