அரியலூரில் உள்ள திருச்சி சாலையில் குழிகள் இருந்ததால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு விபத்து அபாயம் இருப்பதாக பொதுமக்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்கும் பணியை தொடங்கினர். ஆனால் தற்போது வரை அந்த பணிகளை முடிக்காமல் வைத்துள்ளனர். இதனால் அந்த சாலையில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் செல்வதிலும் சிரமம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சூழலை கருத்தில் கொண்டு சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.