கட்டிட வசதி வேண்டும்

Update: 2025-05-11 12:44 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அகரம்சீகூர் கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இதில் மற்ற பகுதியில் உள்ளதுபோல் நெல் மூட்டைகளை வைப்பதற்கு நெல் கொள்முதல் கட்டிடம் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகும் நிலையில் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் கட்டிடம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்