சென்னை தியாகராயநகர், ராமேஸ்வரம் தெரு பகுதியில் உள்ள ராம்ஸ் குடியிருப்பு, காமகோடி குடியிருப்பு, வைத்யா குடியிருப்பு, அக்ஷயா குடியிருப்பு போன்ற குடியிருப்பு பகுதிகள் உள்ளது. ஆனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கடந்த 1 வார காலமாக சென்னை மெட்ரோ குடிநீர் சரியான முறையில் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிநீரை பணம் கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்க வழி செய்ய வேண்டும்.