ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ளதால், சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றனர். இதுபோன்ற சூழலில் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால், அவர்கள் தாக்குதலுக்கு ஆளாகும் நிலை காணப்படுகிறது. எனவே ஊட்டியில் காட்டெருமைகள் நடமாட்டத்தை குறைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.