விருத்தாசலம் -குப்பநத்தம் புறவழிச்சாலையில் இருபுறமும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை முறையாக அகற்றி அங்கு துப்புரவு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?