பழனி அடிவார பகுதியில் ஏராளமான ஓட்டல்கள் செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டல்களில் பெரும்பாலனவற்றில் உணவு பொருட்களின் விலை குறித்து எவ்வித பட்டியலும் வைக்கப்படுவதில்லை. இதனால் வெளியூர் பக்தர்களிடம் அதிக விலைக்கு உணவை விற்று ஏமாற்றுகின்றனர். இதனால் வெளியூர் பக்தர்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே ஓட்டல்களில் உணவு பட்டியல் இருப்பதை உறுதி செய்ய துறை அதிகாரிகள் உரிய ஆய்வு செய்ய வேண்டும்.