உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரி கட்டிடம் விரிவாக்கம் செய்யப்பட்டு பல்வேறு சிகிச்சை பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு பணியாற்ற டாக்டர்கள் போதிய அளவில் நியமிக்கப்படவில்லை. இதனால் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே டாக்டர்கள் பற்றாக்குறையை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.