அரியலூர் அருகே உள்ள மேற்கு சீனிவாசபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே பல ஆண்டுகள் கடந்த புளியமரம் உள்ளது. இது சமீபத்தில் பெய்த மழையில் ஒரு பக்கம் உடைந்து விழுந்து விட்டது மீதி பகுதி எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மரம் உடைந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.