திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு, வட்டார வளர்ச்சி அலுவலகம் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய களக்காட்டூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்துக்கு சுடுகாடு ஒன்று உள்ளது. இந்த சுடுகாட்டுக்கு செல்லும் சாலை சேதமடைந்து வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. மேலும் சுடுகாட்டை சுற்றி சுற்றுசுவர் இல்லாததால் புதர் மண்டி காணப்படுகிறது, இதனால் இங்கு கொண்டுவரப்படும் உடல்கள் அருகில் உள்ள விளைநிலங்களில் புதைக்கப்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக சுடுகாட்டை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.