தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2025-05-04 11:45 GMT

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செங்குணம் கிராமத்தில் 2002-2003 நிதியாண்டில் பகுதி-2 திட்டத்தின் கீழ் ரூ.70 ஆயிரத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் இதுவரை எந்த விதமான சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு புதுப்பிக்கப்படுவதில்லை என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகத்தை சீரமைத்து புதுப்பித்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்