மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தென்கரை நாகம்மாள் கோவில் பகுதிகளில் வேகத்தடை இல்லாததால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் அதிவேகத்தில் வாகனங்களை இயக்கி வருகின்றனர். அப்பகுதியில் நடந்த செல்லும் பொதுமக்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும் அச்சமடைகின்றனர். எனவே பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட இடத்தில் வேகத்தடைகள் அமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?