சீரமைக்க வேண்டும்

Update: 2025-05-04 11:09 GMT

தர்மபுரம் ஊராட்சிக்கு சொந்தமான அரசு ஊர்புற நூலக கட்டிடம் ஈத்தாமொழியில் உள்ளது. இந்த நூலக கட்டிடத்தின் மேல்பகுதியில் மரக்கிளை படர்ந்து இருப்பதால் கான்கிரீட் மேற்கூரை சேதமடையவும், மழை காலங்கள் நீர் கசிவு ஏற்பட்டு விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், நூலகத்தில் உள்ள கழிவறையின் கதவுகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் நூலகத்துக்கு செல்லும் வாசகர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்