நெய்வேலி அருகே மேல்பாப்பனப்பட்டு கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது. இதனால் அங்கன்வாடிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுக்கின்றனர். எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.