விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மீன் மார்க்கெட் பகுதியில் அதிகளவில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இவை அங்கேயே தீயிட்டு எரிக்கப்படுவதால் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல், கண்எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. கடும் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து
நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.