செஞ்சி காந்தி பஜாருக்கு வரும் பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனங்களை சாலையிலேயே தாறுமாறாக நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துகளும் ஏற்படுகின்றன. இதை தடுக்க போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.