தியாகதுருகம் அருகே கூத்தக்குடி கிராமத்தில் நாளுக்கு நாள் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது. இவை கடை மற்றும் வீடுகளில் புகுந்து பொருட்களை சேதப்படுத்துவதோடு விரட்ட வருபவர்களையும் கடிக்க பாய்கின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடனேயே வசிக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குரங்குகளை பிடித்து காப்புக்காட்டில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.