அவசியம் எச்சரிக்கை பலகை

Update: 2025-04-27 14:50 GMT

சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து குரங்குசாவடி வரை வாகன போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தடுப்பதற்காக புதியதாக மேம்பாலம் அமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது. இந்த மேம்பாலம் வளைவு மேம்பாலம் ஆகும். மிக அபாயகரமான வளைவு பகுதியில் எச்சரிக்கை அறிவிப்பு பலகைகளும், ஒளிரும் பட்டைகளும் பொருத்தப்படாமல் உள்ளது. மேலும் தடுப்புச்சுவரின் உயரம் மிக குறைவாக உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அவசியம் எச்சரிக்கை பலகை அமைத்து, தடுப்புச்சுவரை உயர்த்தி கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

-கணேசன், சேலம்.

மேலும் செய்திகள்