மின்விளக்குகள் அமைக்கப்படுமா?

Update: 2025-04-27 14:49 GMT

சேலம் ஏற்காடு மலைப்பகுதி அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் பிரதான சுற்றுலா தலம் ஆகும். மலைக்கு செல்லும் கொண்டை ஊசி வளைவுகளில் ஒரு சில இடங்களில் மின்விளக்குகளும், எச்சரிக்கை ஒளிரும் பட்டைகளும் பொருத்தப்படாமல் உள்ளது. இதன் காரணமாக கொண்டை ஊசி வளைவு முழுவதுமாக இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே சுற்றுலா பயணிகளின் நலன் கருதி மின் விளக்குகள் மற்றும் ஒளிரும் பட்டைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ஆகாஷ், சேலம்.

மேலும் செய்திகள்