செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் கௌரிவாக்கம் அண்ணா தெருவில் உள்ள ஒரு வீட்டின் அருகில் மண் மற்றும் கட்டிடக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. சாலை அருகில் கொட்டப்பட்டுள்ளதால் இந்த வழியில் வாகனங்கள் எதுவும் செல்ல முடியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் மிகவும் அவதி அடைகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.