செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பையம்பாடி கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் மேல் நிலை நீர் தேக்க தொட்டி ஒன்று உள்ளது. இதில் இருந்து அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த மேல் நிலை நீர் தேக்க தொட்டி கடந்த 4 ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமல் மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மேல் நிலை நீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்யவும், பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.