வாகன ஓட்டிகள் அவதி

Update: 2025-04-27 14:42 GMT

திருவள்ளூர் மாவட்டம், புழல்-அம்பத்தூர் வரை உள்ள நெடுஞ்சாலையை ஏராளமான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நெடுஞ்சாலையிலுள்ள தனியார் பள்ளி,கல்லூரிக்கு எதிரில் கட்டப்பட்ட குடிநீர் பைப்லைனில் சோதனை கட்டுமானம் பல ஆண்டுகளாக அகற்றப்படாமல் உள்ளது. இதனால் நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடைஞ்சலாக இருக்கிறது. அந்த பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் அந்த கட்டுமானத்தை உடனடியாக அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்