பயங்கர துர்நாற்றம்

Update: 2025-04-27 14:40 GMT

திருவள்ளூர் மாவட்டம், பெரிய கோலடி சாலை மற்றும் அம்பத்தூர்-ஆவடி, ஆவடி-திருவேற்காடு செல்லும் சந்திப்பு சாலையை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். பல்வேறு பகுதியில் இருந்து கொண்டுவரப்படும் கழிவுநீரானது லாரிகள் மூலமாக இரவு நேரங்களில் இந்த பகுதியில் கொட்டப்படுகிறது. இதனால் பயங்கர தூர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரம் மிகவும் கேள்விக்குறியாகிறது. மேலும் இந்த பகுதியில் உள்ள நீர்நிலைகளும் அசுத்தம் நிறைந்ததாக மாறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவுநீர் கொட்டுவதை உடனடியாக தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்