திருவள்ளூர் மாவட்டம், பஞ்செட்டி பஸ் நிலைய பகுதியில் உள்ள மின்விளக்குகள் கடந்த 3 மாத காலமாக எரியாமல் இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து புதிய மின்விளக்கு அமைத்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.
............