கோவை பாப்பநாயக்கன்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலைகளில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அவை சில நேரங்களில் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்தி சென்று கடிக்க முயல்கின்றன. இதனால் அவர்கள் அச்சப்படுகிறார்கள். மேலும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே அங்கு தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.