அரியலூர்-திருச்சி சாலையில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களிலும், இரவு நேரங்களிலும் என எப்போதும் இந்த பகுதியில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றி வருகின்றன. இதனால் பள்ளிக்கு வரும் மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதனால் இரவு நேரங்களில் பெண்கள் வெளியில் வருவதற்கே அச்சப்படும் சூழல் உள்ளது. குழந்தைகளும் நிம்மதியாக வெளியில் விளையாட செல்ல முடிவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.